Kanmani Anbodu Lyrics - Kamal Hassan and S.Janaki Lyrics


Singer Kamal Hassan and S.Janaki
Music Ilayaraja
kanmani anboadu kaadhalan naan ezhudhum kadidhamae
ponmani un veettil soukyamaa naan ingu soukyamae
unnai ennip paarkkaiyil kavidhai sottudhu
adhai ezhudha ninaikkaiyil varththai muttudhu

(kanmani)

undaana kaayam yaavum thannaalae aarip poagum
maayam enna ponmaanae ponmaanae
enna kaayam aana poadhum en maeni thaangik kollum
undhan maeni thaangaadhu sendhaenae
endhan kaadhal ennavenru sollaamal aenga aenga azhugai vandhadhu
endhan soagam unnaith thaakkum enrennumboadhu vandha azhugai ninradhu
manidhar unarndhu kolla idhu manidhak kaadhalalla
adhaiyum thaandip punidhamaanadhu

abiraamiyae thaalaattum saamiyae naandhaanae theriyumaa
sivagaamiyae sivanil neeyum paadhiyae adhuvum unakku puriyumaa
suba laali laali laali laali
abiraami laali laali laali




கண்மணி அன்போட காதலன் நான்
நான் எழுதும் letter ச்சி மடல் இல்ல கடுதாசி வெச்சுக்கலாமா வேணாம் கடிதம்னே இருக்கட்டும், படி
கண்மணி அன்போடு காதலன் நான் எழுதும் கடிதமே
பாட்டாவே படிச்சிட்டியா அப்போ நானும்
மொதல்ல கண்மணி சொன்னேன்ல இங்க பொன்மணி போட்டுக்க
பொன்மணி, உன் வீட்ல சௌக்கியமா நான் இங்க சௌக்கியம்
பொன்மணி உன் வீட்டில் சௌக்கியமா நான் இங்கு சௌக்கியமே
உன்னை நெனச்சு பாக்கும்போது கவித மனசுல அருவி மாறி கொட்டுது
ஆனா அத எழுதனும்னு உக்காந்தா அந்த எழுத்து தான் வார்த்த
உன்னை எண்ணிப் பார்க்கையில் கவிதை கொட்டுது(அதான்)
அதை எழுத நினைக்கையில் வார்த்தை முட்டுது(அதே தான்)
ஆஹா பிரமாதம் கவித கவித, படி
கண்மணி அன்போடு காதலன் நான் எழுதும் கடிதமே
பொன்மணி உன் வீட்டில் சௌக்கியமா நான் இங்கு சௌக்கியமே
உன்னை எண்ணிப் பார்க்கையில் கவிதை கொட்டுது
அதை எழுத நினைக்கையில் வார்த்தை முட்டுது
ஓஹோ கண்மணி அன்போடு காதலன் நான் எழுதும் கடிதமே(ல ல ல ல ல ல ல ல ல ல ல)
பொன்மணி உன் வீட்டில் சௌக்கியமா நான் இங்கு சௌக்கியமே(ல ல ல ல ல ல ல ல ல ல ல)
எனக்குண்டான காயம் அது தன்னால ஆறிடும்
அது என்னவோ தெரியல என்ன மாயமோ தெரியல
எனக்கொன்னுமே ஆவறதில்ல
இந்நும் எழுதிக்க, நடுல நடுல மானே, தேனே, பொன்மானே இதெல்லாம் போட்டுக்கணும்
இதோ பாரு எனக்கென்ன காயம் இருந்தாலும் உடம்பு தாங்கிடும்
உன் உடம்பு தாங்குமா, தாங்காது அபிராமி, அபிராமி அபிராமி
அதையும் எழுதணுமா? ம்ஹம் இது காதல்
என் காதல் என்னனு சொல்லாம ஏங்க ஏங்க அழுகையா வருது
ஆனா நான் அழுது என் சோகம் உன்ன தாக்கிடுமோ அப்படினு நினைக்கும்போது
வர்ர அழுகை கூட நின்னுடுது
மனிதர் உணர்ந்து கொள்ள இது மனிதக் காதலல்ல...
அதையும் தாண்டிப் புனிதமானது
உண்டான காயம் எங்கும் தன்னாலே ஆறிப்போன
மாயம் என்ன பொன்மானே பொன்மானே
என்ன காயம் ஆன போதும் என் மேனி தாங்கிக் கொள்ளும்
உந்தன் மேனி தாங்காது செந்தேனே
எந்தன் காதல் என்னவென்று சொல்லாமல் ஏங்க ஏங்க அழுகை வந்தது
எந்தன் சோகம் உன்னைத் தாக்கும் என்றெண்ணும்போது வந்த அழுகை நின்றது
மனிதர் உணர்ந்து கொள்ள இது மனிதக் காதலல்ல
அதையும் தாண்டிப் புனிதமானது
அபிராமியே தாலாட்டும் சாமியே நாந்தானே தெரியுமா
சிவகாமியே சிவனில் நீயும் பாதியே அதுவும் உனக்கு புரியுமா
சுப லாலி லாலி லாலி லாலி
அபிராமி லாலி லாலி லாலி
அபிராமியே தாலாட்டும் சாமியே நாந்தானே தெரியுமா
உனக்கு புரியுமா